கும்பகோணத்துக்கு வடகிழக்கே 8 கி. மீ. தொலைவில் உள்ளது.
தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். காசிக்கு ஒப்பான ஆறு தலங்களுள் ஒன்று. திருவெண்காடு, மயிலாடுதுறை, திருவையாறு, ஸ்ரீவாஞ்சியம், திருச்சாய்க்காடு ஆகியவை மற்றத் தலங்கள். இத்தலம் 'மத்திய அர்ஜுனம்' என்றும் 'இடைமருது' என்றும் வழங்கப்படுகிறது. அர்ஜுனம் என்பது மருத மரத்தின் மற்றொரு பெயர். வடக்கே ஸ்ரீசைலம் 'தலைமருது' என்றும், இத்தலம் 'இடைமருது' என்றும், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகிலுள்ள திருப்புடைமருதூர் 'கடைமருது' என்றும் வழங்கப்படுகிறது.
மேலும் இத்தலம் 'மகாலிங்கத் தலம்' என்றும் வழங்கப்படுகிறது. அதற்கு ஏற்றவாறு இத்தலத்தைச் சுற்றிக் கீழ்க்கண்ட தலங்கள் பரிவாரத் தலங்களாக விளங்குகின்றது.
1. திருவலஞ்சுழி - விநாயகர்
2. சுவாமிமலை - முருகர்
3. சிதம்பரம் - நடராசர்
4. சூரியனார் கோயில் - நவக்கிரகங்கள்
5. ஆலங்குடி - தட்சிணாமூர்த்தி
6. சீர்காழி - பைரவர்
7. திருவாவடுதுறை - நந்தி
8. திருவாரூர் - சோமாஸ்கந்தர்
9. திருவாய்ப்பாடி - சண்டேஸ்வரர் |